• Tue. Jul 8th, 2025

24×7 Live News

Apdin News

சீனு ராமசாமி – கார்த்திக் சுப்புராஜ் இணைந்து வெளியிட்ட ‘ கெவி’ பட முன்னோட்டம்

Byadmin

Jul 7, 2025


தேசிய விருது பெற்ற படத்தின் நடித்த நடிகை ஷீலா கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘ கெவி ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநர்கள் சீனு ராமசாமி – கார்த்திக் சுப்புராஜ் – பிரசாந்த் பாண்டியராஜ்-  இசையமைப்பாளர்கள் ஜீ.வி. பிரகாஷ் குமார் – ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ கெவி ‘ எனும் திரைப்படத்தில் ஷீலா, ஜாக்குலின் , ஆதவன் , சார்லஸ் வினோத் , ஜீவா சுப்ரமணியன் , காயத்ரி , விவேக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜெகன் ஜெயசூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜா ரவிவர்மா இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆற்றுப்படை ஏஞ்சல்ஸ் பிலிம் கம்பனி சார்பின் தயாரிப்பாளர்கள் மணிகண்டன் -ஜி . பெருமாள் – ஜெகன் ஜெயசூர்யா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் அடர்ந்த வனத்தின் ஊடாக அங்கு வாழும் மக்களின் வாழ்வியலையும் , அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களையும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் விவரிக்கும் காட்சிகள் இடம்பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

By admin