• Wed. Jul 1st, 2026

24×7 Live News

Apdin News

சீன தலைநகர் பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் மோதிய விமானம் – 4 நாட்களாக நீடிக்கும் மர்மம் என்ன?

Byadmin

Jul 1, 2026


பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் மோதிய விமானம் - சீனாவின் மௌனத்தால் நீடிக்கும் ஊகம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விபத்துக்கு பின் கட்டடத்தின் முன்பு கூடிய மக்கள்

    • எழுதியவர், கெல்லி என்ஜி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பெய்ஜிங்கின் மிக உயரமான வானளாவிய கட்டடத்தில் ஒரு சிறிய விமானம் மோதி, விமானத்தில் இருந்த ஒரே நபரான விமானி உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து நடைபெற்று நான்கு நாட்கள் கடந்துவிட்டன.

ஆனால், அது ஏன், எப்படி நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து சீனா இதுவரை வெளியிட்ட ஒரே அதிகாரப்பூர்வ அறிக்கை, அரசுக்கு சொந்தமான ‘பெய்ஜிங் டெய்லி’ பத்திரிகையில் வந்த 60 சொற்கள் கொண்ட ஒரு சிறிய செய்தி மட்டுமே.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஜொங்னான்ஹாயில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

By admin