• Mon. Sep 28th, 2026

24×7 Live News

Apdin News

சுத்தத்திற்கு பெயர் போன ஜப்பான் தெருக்களில் குப்பைத் தொட்டிகளை காண்பதே அரிதாக இருப்பது ஏன்?

Byadmin

Sep 28, 2026


ஜப்பான் தெருக்களில் குப்பைத் தொட்டிகளைக் காண்பது ஏன் அரிதான ஒன்றாக உள்ளது?

    • எழுதியவர், மிஷெல் கிராஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஜப்பானில் பொது இடங்களில் குப்பைத் தொட்டிகளைப் பார்ப்பது மிகவும் அரிதான ஒன்று. 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற மோசமான ஒரு தாக்குதல் தொடங்கி ஆழமாக வேரூன்றியுள்ள சமூக நெறிமுறைகள் வரை இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் நீங்கள் ஒரு நாள் உலா சென்றால் ஒரு காலி காபி கோப்பை மற்றும் பல சாண்விட்ச் உறைகளை எடுத்துச் செல்வீர்கள். அதனுடன் ஒரு விதமான குழப்ப மனநிலையும் உங்களுக்கு உருவெடுக்கும். ஜப்பான் அதன் தூய்மைக்காக அறியப்பட்டது. ஆனால் வெளியில் எடுத்துச் செல்லும் பொருட்களை தூக்கிப் போடுவதற்கு ஏன் ஓர் இடத்தை கண்டடைவது சிரமமான ஒன்றாக உள்ளது?

ஜப்பானுக்கு அவ்வப்போது பயணம் செய்பவர்களுக்கு இந்த மனக்குமுறல் பழகியிருக்கும். குழம்பிப்போன சுற்றுலா பயணிகள் குப்பையே இல்லாத தெருக்களில் குப்பைத் தொட்டிகளைத் தேடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.

ஆனால் அதற்கான பதில் முதலில் தோன்றுவதைவிட சிக்கலானது.

“இது வரலாற்று ரீதியான வளர்ச்சிகள், பொருளாதார நிகழ்வுகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் மக்கள் எவ்வாறு செயல்படத் தீர்மானிக்கிறார்கள் என்பதில் அவற்றின் பன்முகத் தாக்கங்கள் ஆகியவற்றின் ஒரு சிக்கலான கலவையாகும்,” என்று வில்லியம்ஸ் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியரும், ‘கழிவு: போருக்குப் பிந்தைய ஜப்பானை நுகர்தல் (Waste: Consuming Postwar Japan)’ என்ற நூலின் ஆசிரியருமான ஐகோ மருக்கோ சினியாவர் கூறுகிறார்.

By admin