9
தமிழ் திரையுலகத்தின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான யோகி பாபுவும் , தெலுங்கு திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான சத்யாவும் இணைந்து கதையின் நாயகர்களாக கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘கோல்டன் பாக்கியம்’ என பெயரிடப்பட்டு, அதற்கான அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் பவன் பாசம்செட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோல்டன் பாக்கியம்’ திரைப்படத்தில் யோகி பாபு – சத்யா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு பவன் சி ஹெச் மற்றும் நித்திஷ் ஜான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கொமர்ஷல் கொமடி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் மூவி மேக்கர்ஸ் மற்றும் நயாவாயு சித்திரலு ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டொக்டர் .நாகார்ஜுன ரெட்டி- ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் பாப்பி ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் விமர்சன ரீதியாகவும், வணிகரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்ற ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு பிறகு… தமிழ் திரையுலகைச் சார்ந்த யோகி பாபுவும் … தெலுங்கு திரையுலகைச் சார்ந்த சத்யாவும்… ஒன்றிணைந்து கொமடி திரைப்படத்தில் நடிப்பதால்.. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான அறிமுக காணொளியில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும் … உரையாடலும்… படத்தை பற்றிய தமிழ் தெலுங்கு என இரு மொழி ரசிகர்களிடமும் உற்சாகத்தையும், ஆர்வத்தையும்உண்டாக்கி இருக்கிறது.