• Sat. Jul 4th, 2026

24×7 Live News

Apdin News

சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது உங்கள் ஆரோக்கியத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

Byadmin

Jul 4, 2026


சூரியன், சூரிய அஸ்தமனம், சூரிய உதயம், ஆரோக்கிய நன்மைகள்

பட மூலாதாரம், Mark Stetson

    • எழுதியவர், அலி ஹிர்ஷ்லாக்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மனிதர்கள் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் ஒரு நாளின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கும் “புத்தகத்தின் இரு முனைகள்” போலப் பார்க்கிறார்கள். இந்த “கோல்டன் ஹவர்” நேரம் நமது நினைவாற்றல், தூக்கம் மற்றும் மனநிலையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

எனது திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை, எனது பெற்றோர்கள், எனது வருங்கால கணவர் மற்றும் நான் மாசசூசெட்ஸில் உள்ள கேப் காட் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தளத்திலிருந்து மிகவும் அழகான, மறக்க முடியாத சூரிய அஸ்தமனத்தைக் கண்டோம்.

கேப் காட் பகுதி, “கோல்டன் ஹவர்” எனப்படும் பொன் அந்தி மாலைப்பொழுதில் தோன்றும் ரம்யமான வெளிச்சத்திற்கு மிகவும் பிரபலமானது.

அன்று, மேற்கிலிருந்து ஒரு புயலும் நெருங்கி வந்து கொண்டிருந்தது, அதனால் வானில் விரிந்த வண்ணங்கள் ஒருவித மாயாஜாலத் தோற்றத்தை அளித்தன. ஆண்கள் அந்த காட்சியை புகைப்படங்களாக பதிவு செய்துக் கொண்டிருந்தபோது, ​​நானும் எனது அம்மாவும் அந்த செப்டம்பர் மாதத்தின் குளிர்ந்த காற்றில் நடுங்கிக்கொண்டே அழகை ரசித்துக் கொண்டிருந்தோம்.

நாங்கள் மீண்டும் வீட்டிற்குள் சென்றபோது, நான் என் அம்மாவைக் கட்டிப்பிடித்தேன். எங்கள் திருமணத்திற்கு முந்தைய கவலைகள் அனைத்தும் அந்த அஸ்தம சூரியனுடன் சேர்ந்து மறைந்துவிட்டது போலத் தோன்றியது.

By admin