• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

சூர்யா – ஜோதிகாவின் 20 ஆண்டுகால வாழ்க்கையில் மீண்டும் ஒரு அழகிய காதல் ஓவியம்

Byadmin

Sep 17, 2026


திருமணமாகி 20 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது தன் காதல் மனைவியான ஜோதிகாவை கிறிஸ்தவ முறைப்படி  மகன் மற்றும் மகள் முன்னிலையில் மீண்டும் மணந்திருக்கிறார் சூர்யா. வெளிநாட்டில் நடந்த அந்த திருமணத்தில் பிள்ளைகள், தம்பி கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சூர்யா, ஜோதிகா இருவருமே தொடக்க காலங்களில் இருவரும் ஜோடியாக பல படங்களில் நடித்த  நிலையில்  அவர்களுக்கு இடையே நட்பு உருவாகி ஒரு கட்டத்தில் அந்த நட்பு காதலாக மாறியது.

இவர்கள் 2006 ஆம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி பெற்றோர்களின் ஆசியோடு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் இணைந்து கடைசியாக சில்லென்று ஒரு காதல் படத்தில் நடித்திருந்தனர். திருமணத்திற்கு பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, அவ்வப்போது தமிழ், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

மொழிபெயர்ப்பு செயலிகளைப் பயன்படுத்து

ஒரு சிறந்த கணவன், மனைவியாகவும், திரையில் முன்னுதாரணமாகவும் சூர்யாவும் ஜோதிகா தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில்சூர்யா, ஜோதிகா தான் 20 ஆவது திருமண விழாவை சிறப்பாக முறையில் வெளிநாட்டில் கொண்டாடிய   அழகிய தருணத்தினை  தன் சமூக  ஊடகங்களில்  புகைப்படங்கள்  மற்றும்  காணொளிகளை வெளியிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சூர்யா, ஜோதிகா  ’20வது திருமண விழாவை தொடர்ச்சி’ (The Sequel) என்ற பெயரில் திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொளி ஒன்றை இன்று ஜோதிகா வெளியிட்டுள்ளார்.

ஜோதிகா, “நமது அடுத்த 20 ஆண்டுகளுக்கு வாழ்த்துகள் — குறைகளைக் கொண்ட நாம், நிறைவான புரிதலுடன்!” எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த நெகிழ்ச்சியான புகைப்படங்கள்  மற்றும்  கானொளிகளை  பார்த்து அவர்களின் இரசிகர்கள்   மற்றும் திரையுலகத்தினை  சேர்ந்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

By admin