• Thu. Sep 17th, 2026

24×7 Live News

Apdin News

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: அரசியல் தலையீடு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் – முழு பின்னணி

Byadmin

Sep 17, 2026


மீனாட்சி அம்மன் கோவில், குடமுழுக்கு, மதுரை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடைபெறுவது வழக்கம், இதற்கு முன்னர் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் 2018இல் கோலில் ஏற்பட்ட ஒரு தீ விபத்து காரணமாக அது தடைபட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு செப்டம்பர் 17 குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த விழாவுக்கு அனுமதி அட்டைகள் (பாஸ்) வழங்குவதில் குளறுபடிகள் உள்ளதாகவும், விழாவில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவரும், முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி பழனிவேல்ராஜன் நேற்று (செப்டம்பர் 15) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், “பாஸ் விவகாரத்தில் நாங்கள் எந்தத் தலையீடும் செய்யவில்லை. அறங்காவலர்கள் குழுவைத் தொடர்பு கொண்டு அவர்கள் தேவையைப் பூர்த்தி செய்யச் சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தக் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுவது ஏன்? இப்போது எழுந்துள்ள ‘அரசியல் தலையீடு’ குறித்த பின்னணி என்ன?

By admin