• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

சூறாவளி காற்றால் 300 அடி தூக்கி வீசப்பட்ட நபர்: வைரலாகும் வீடியோ

Byadmin

May 14, 2026


உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

புயலால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின்கம்பங்கள் சேதமடைந்தது. இதனால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், உ.பி.யின் பரேலியில் வீசிய கடுமையான புயலின்போது தகரத்தைப் பிடித்துக் கொண்டிருந்த நபர் சுமார் 300 மீட்டர் உயரம் வரை தூக்கி வீசப்பட்டார்.

பரேலி மாவட்டத்தின் பாமியோரா கிராமத்தைச் சேர்ந்தவரான நன்ஹே மியான் புயலில் இருந்து தப்பிக்க திருமண மண்டபத்தில் இருந்த தகரத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றினால் தகரத்துடன் அவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டார்.

சுமார் 300 மீட்டர் வரை தூக்கி வீசப்பட்டதால் அவருக்கு கைகள் மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியது.

By admin