• Thu. May 14th, 2026

24×7 Live News

Apdin News

நீட் தேர்வு ரத்தானது குறித்து தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுவது என்ன?

Byadmin

May 14, 2026


இந்தியா முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியா முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“ஒரு நாளைக்கு 2-3 மணிநேர தூக்கம்தான். கடின உழைப்புடன் படித்தேன், இன்று எதற்கும் பயனில்லாமல் போய்விட்டது.”

“தேர்வுக்காக பயிற்சியெடுக்கும்போது கடும் மன அழுத்தம் ஏற்பட்டது. யாரிடமாவது சிறிது நேரம் பேசினாலும், அந்த நேரம் படித்திருக்கலாமே என்ற உணர்வுதான் ஏற்படும். அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை.”

இவை இந்தாண்டு மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வெழுதிய சில மாணவர்கள் கூறியவை. வினாத்தாள் கசிந்ததாக கூறி இத்தேர்வை ரத்து செய்து மே 12 அன்று அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்தது.

இந்தியா முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பல லட்ச மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

By admin