• Thu. Aug 27th, 2026

24×7 Live News

Apdin News

சென்னையில் இருந்து சென்று நேபாள வெள்ளத்தில் சிக்கிய 49 தமிழர்களின் நிலை என்ன?

Byadmin

Aug 27, 2026


நேபாளம், வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் 49 சுற்றுலா பணிகள் கடந்த 14-ஆம் தேதி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிறுவனம் மூலமாக பயணம் மேற்கொண்ட 49 பயணிகளின் நிலை பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் சத்யநாராயணன், பயணிகளுக்கு வழிகாட்டியாக சென்றுள்ளார்.

“நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், இமிக்ரேஷன் அலுவலகத்தில் காத்திருந்த தனது மகன் மற்றும் பயணிகள் குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை,” என பிபிசி தமிழிடம் பேசிய சத்யநாராயணின் தந்தை மாரவேல் நாகப்பன் தெரிவித்தார்.

சுற்றுலா நிறுவனம் தனது மகன் பெயரில் இயங்கி வருவதாகவும் பயணிகளுடன் அவ்வப்போது தானும் வழிகாட்டியதாக சென்று வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

நேபாளம், வெள்ளம்

புதன்கிழமை காலை சுமார் 8.40 மணியளவில் சத்யநாராயணன் தன்னைத் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறிய அவர், “காலை 7.30 மணியளவில் கிராங் என்ற பகுதிக்கு வந்துவிட்டனர். அங்கிருந்து இமிக்ரேஷன் அலுவலகம் சென்றனர். அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதாக என் மகன் கூறினார்.” என்கிறார்.

By admin