• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

சென்னையில் 1.80 லட்சம் தெரு நாய்கள்: மாநகராட்சி கணக்கெடுப்பில் தகவல் | 1.80 Lakh Stray Dogs on Chennai: Information on Corporation Survey

Byadmin

Sep 22, 2024


சென்னை: சென்னை மாநகர பகுதியில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் வலுவாக இருப்பதால், அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

இந்நிலையில், உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவனம் மூலம் கடந்த சில மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கணக்கெடுத்தது. கணக்கெடுப்பு அறிக்கையை மாநகராட்சி மேயரிடம் உலகளாவிய கால்நடை மருத்துவ சேவைகள் நிறுவன இயக்குநர் கார்லெட் ஆனி ஃபெர்னான்டஸ் நேற்று முன்தினம் வழங்கினார்.

அதன்படி, சென்னையில் தற்போது 1 லட்சத்து 80 ஆயிரம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது இருந்த 57,366 நாய்களை விட 2 மடங்கு உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அம்பத்தூர் மண்டலத்தில் 23,980, மாதவரம் மண்டலத்தில் 12,671, குறைந்த பட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 4,875 நாய்கள் உள்ளன.



By admin