சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கான ஆர்டிஐ இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளர் எஸ்.அல்லி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலை பெறும் வகையில் https://mhc.tn.gov.in/eservices/rti என்ற இணையவழி முகப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தும் வழிமுறைகள் சென்னை உயர் நீதிமன்ற வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.