• Mon. Sep 30th, 2024

24×7 Live News

Apdin News

சென்னை கலங்கரை விளக்கம் – கச்சேரி சாலை வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தீவிரம் | Metro rail tunnel work is going on in full swing in chennai

Byadmin

Sep 30, 2024


சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 4-வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம் – கச்சேரி சாலை நோக்கி சுரங்கப்பாதை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலைங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சுரங்கப்பாதை பணிக்காக, கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில்நிலையத்தில் இருந்து முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான “ஃபிளமிக்கோ” கடந்த ஆண்டு செப்-1-ம் தேதி பணியைத் தொடங்கியது.2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான “கழுகு” தனது பணியை இந்த ஆண்டில் ஜன.18-ம் தேதி தொடங்கியது. இந்த இயந்திரங்கள் அடுத்தடுத்து கச்சேரி சாலை, திருமயிலை, பாரதிதாசன் சாலை ஆகிய மெட்ரோ ரயில் நிலையம் வழியாக போட்கிளப்பை அடையவுள்ளது.

இந்நிலையில், கலங்கரை விளக்கம் முதல் கச்சேரி சாலை வரை சுரங்கப்பாதை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

முதல்கட்டமாக, கலங்கரை விளக்கம் – கச்சேரி சாலை வரை மொத்தம் 1,260 மிட்டர் சுரங்கம் பாதை அமைக்க வேண்டும். ஃபிளமிங்கோ சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, தற்போது வரை 852 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. “கழுகு” சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, 732 மீட்டர் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஃபிளமிங்கோ இயந்திரம், பூமிக்கடியில் கடினமான பகுதிகளில் துளையிடுகிறது. இந்த இயந்திரம் தினசரி 8 மீட்டர் வரை சுரங்கம் தோண்டப்படுகிறது. 2 மாதங்களில் கச்சேரி சாலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.



By admin