• Mon. Jul 28th, 2025

24×7 Live News

Apdin News

சென்னை பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக மேலும் ஒரு கிராமம் – பிபிசி கள ஆய்வு

Byadmin

Jul 28, 2025


சென்னை, பரந்தூர் விமான நிலையம், ஏகனாபுரம், வளத்தூர்
படக்குறிப்பு, கோகிலா

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

காஞ்சிபுரத்தில் உள்ள வளத்தூர் கிராம மக்களுக்கு அதிர்ச்சியூட்டக் கூடிய நாளாக கடந்த ஜூலை 24-ஆம் தேதி அமைந்தது.

‘பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்துக்காக கிராமத்தில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்த உள்ளதால், அசல் ஆவணங்கள் மற்றும் நகல்களுடன் நேரில் ஆஜராக வேண்டும்’ என நில எடுப்பு அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸை இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கவில்லை.

புதிய விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியை ஒட்டி இக்கிராமம் அமைந்துள்ளது.

இங்குள்ள சுமார் 900 ஏக்கர் நிலங்களின் உரிமையாளர்களாக பட்டியல் சமூக மக்களே உள்ளனர்.

By admin