• Wed. Jul 23rd, 2025

24×7 Live News

Apdin News

செம்மணிப் புதைகுழியில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போச்சி அடையாளம்! (படங்கள் இணைப்பு)

Byadmin

Jul 23, 2025


செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டிலிருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போச்சியை ஒத்த பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதிகள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடயவியல் அகழ்வாராய்ச்சித் தளம் இரண்டாக அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகின.

அங்கு இன்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போச்சியை ஒத்த பொருள் ஒன்றும், வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாளைய அகழ்வின் பின்னரே இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறும்.

By admin