1
யாழ்ப்பாணம் – செம்மணியில் நேற்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது ஒரு பெரிய மனித எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் அரவணைக்கப்பட்ட நிலையில் ஒரு சிறிய எலும்புக்கூட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது என்று சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவித்தார்.
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் குறித்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெரிய மனித எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் சிறிய எலும்புக்கூட்டுத் தொகுதியானது அரவணைக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டது.
அவ்விரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் சுத்தப்படுத்தப்பட்டு இன்று காலை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.” – என்றார்.