• Mon. Oct 12th, 2026

24×7 Live News

Apdin News

செளதி அரேபியா சந்திக்கும் அச்சுறுத்தல்: அல்-கய்தா, இரானை சமாளித்த நாட்டுக்கு ஹூத்திகள் ஏன் சவாலாக உள்ளனர்?

Byadmin

Oct 12, 2026


வெள்ளிக்கிழமை, ஏமன் தலைநகர் சனாவில் செளதி அரேபியாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஹூதி வீரர்கள்.

படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை, ஏமன் தலைநகர் சனாவில் செளதி அரேபியாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஹூதி வீரர்கள்.

    • எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் மற்றும் ஜான் டோனிசன்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏவுகணை போன்ற ஒரு பொருள் விழுந்ததாக செளதி ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதனால், பயணிகள் முனையங்களில் ஒன்றில் தீப்பற்றியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக செளதி அரேபியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கு முந்தைய நாளில், இதே விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், 308 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஏற்கெனவே பதற்றமும் மோதல்களும் நிலவும் பிராந்தியத்தில் மீண்டும் ஓர் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன.

இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள செளதி அரேபியா தயாராக இருக்கவில்லை.

By admin