பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடைச் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் இருவரும் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் முன்னதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள இஷாரா செவ்வந்தியைக் கண்டுடித்து கைது செய்ய பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழப்பு! appeared first on Vanakkam London.