• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

செவ்வாயின் நிலவுகள் எங்கிருந்து வந்தன? 450 கோடி ஆண்டுகால புதிருக்கு விடை தேடும் விண்கலம்

Byadmin

Oct 20, 2026


செவ்வாய் கிரகத்தின் பெரிய நிலவான ஃபோபோஸை நோக்கி இந்த விண்கலம் செல்கிறது.

படக்குறிப்பு, செவ்வாய் கிரகத்தின் பெரிய நிலவான ஃபோபோஸை நோக்கி இந்த விண்கலம் செல்கிறது.

    • எழுதியவர், ரெபேக்கா மோரெல்
    • எழுதியவர், அலிசன் பிரான்சிஸ்

    • எழுதியவர், கெவின் சர்ச்
    • பதவி, பிபிசி நியூஸ் சயின்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பூமியின் நிலவைப் பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் செவ்வாய் கிரகத்தின் நிலவைப் பற்றி நாம் அதிகம் கேள்விபட்டிருக்க வாய்ப்பில்லை.

ஜப்பானில் இருந்து செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான போபோஸை நோக்கி ஒரு விண்கலம் ஏவப்பட்டுள்ளது. அங்கு சென்று, அதன் மேற்பரப்பில் உள்ள தூசு மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்குக் கொண்டுவருவது இந்த விண்கலத்தின் நோக்கம்.

இந்த முயற்சி வெற்றியடைந்தால், செவ்வாய் கிரகம் அல்லது அதன் துணைக்கோள்களில் இருந்து மாதிரிகள் பூமிக்குக் கொண்டுவரப்பட்டு, இங்குள்ள ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும்.

இந்த விண்கலம் 2027 ஆகஸ்ட் மாதம் போபோஸைச் சென்றடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

ஜப்பானிய விண்வெளி முகமையால் வழிநடத்தப்படும் செவ்வாய் நிலவுகள் ஆராய்ச்சி திட்டம் (எம்எம்எக்ஸ்) அந்தக் கிரகத்தின் நிலவுகள் எப்படி உருவாகின என்கிற மர்மத்தைத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By admin