• Tue. Oct 20th, 2026

24×7 Live News

Apdin News

சேவாக்: சிக்ஸர்கள், பவுண்டரிகளைத் தாண்டி அவரை சிறந்த வீரராக்கிய 6 விஷயங்கள்

Byadmin

Oct 20, 2026


சேவாக்

ஒரு பேட்டரின் மகத்துவத்தை அவர் குவிக்கும் ரன்களை மட்டுமே வைத்து அளவிட முடியாது. ரசிகர்களின் நினைவுகளில் அவர் என்னவாக எஞ்சியிருக்கிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய மகத்துவம் உணரப்படுகிறது. 90-களில் பிறந்தவர்கள் சிலருக்கு சச்சினை விட சேவாக்தான் ஆதர்சம்.

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் சேவாக் என்றால் துணிச்சல். அப்படி சேவாக்கின் துணிச்சல் வெளிப்பட்ட போட்டி என பாகிஸ்தானுக்கு எதிரான 2004 முல்தான் டெஸ்டை சொல்லலாம். அணியில் தன் இடம் குறித்த கவலையில் சேவாக் இருந்த சமயம் அது. டெஸ்டில் சதமோ இரட்டைச் சதமோ அடிக்காவிட்டால் தன் இடம் காலி என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

அதிரடியாக விளையாடிய சேவாக் முதல் நாளிலேயே இரட்டைச் சதமடித்தார். அடுத்த நாள் முதல் அரைமணி நேரம் கவனமாக விளையாடிய அவர், பிறகு வழக்கமான தனது ஷாட்களை ஆடத் தொடங்கினார். 280 ரன்களில் அவர் இருந்த போது “இன்னும் இரண்டு ரன் எடுத்தால், ஓர் இந்தியர் எடுத்த அதிகபட்ச ஸ்கோரான லட்சுமணின் சாதனையை முறியடித்துவிடுவாய் என்பது உனக்குத் தெரியுமா?” என்று சச்சின் அவரிடம் கேட்டுள்ளார்.

ஆனால், அடுத்த பந்திலேயே எட்ஜ் கொடுத்து சேவாக் அவுட் ஆகியிருக்க வேண்டியது. ஆனால், பந்து கீப்பருக்கும் ஸ்லிப் ஃபீல்டருக்கும் இடையில் சென்றதால் தப்பித்தார்.

பின்னர், 295 ரன்களில் இருந்தபோது சச்சினிடம் சென்ற அவர், “சக்லைன் முஷ்தாக் எப்படி வேண்டுமானாலும் பந்துவீசட்டும். நான் கிரீஸை விட்டு இறங்கி வந்து சிக்ஸர் அடிக்கப் போகிறேன்” என்று சொல்லி இருக்கிறார்.

By admin