• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

சேலம்: புத்தர் சிலை என்று தீர்ப்பு வந்த பிறகும் இந்து வழிபாடு தொடர்வது ஏன்?

Byadmin

Sep 15, 2024


சேலம் தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா?

பட மூலாதாரம், Ramji

படக்குறிப்பு, தலைவெட்டி முனியப்பனாக மாற்றப்பட்ட புத்தர் சிலை

2022-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக தமிழ் பௌத்தர்கள் கருதுகின்றனர்.

சேலம் மாவட்டம் அரசு மருத்துவமனைக்கு எதிரே பெரியேரி கிராமம், கோட்டை சாலையில் அமைந்திருக்கும் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் வழிபடப்படும் முனியப்பன் சிலை, உண்மையில் புத்தர் சிலை என்பது தான் அந்த தீர்ப்பு.

ஆனாலும், தீர்ப்பு வந்த 2 வருடங்கள் கழித்து, தற்போது தான் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் பௌர்ணமி நாளன்று மட்டும் பௌத்த முறைபடி வழிபாடு தமிழ் பௌத்தர்கள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

பௌத்த வழிபாடு தொடங்கினாலும், மற்றொரு தரப்பினர் அந்தச் சிலை தலைவெட்டி முனியப்பன்தான் என்று தொடர்ந்து வாதிடுகின்றனர்.

By admin