• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி – டெல்லியில் என்ன நடக்கிறது?

Byadmin

Jul 18, 2026


சோனம் வாங்சுங் உண்ணாவிரதம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சனிக்கிழமை அதிகாலை காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக சோனம் வாங்சுக் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதப் போராட்டம் 21-வது நாளை எட்டியுள்ளது.

பிடிஐ செய்தி நிறுவனத்தின்படி, கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜந்தர் மந்தரில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கேயும் கைது செய்யப்பட்டுள்ளார். திப்கே தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி போலீசார் என்னை தாக்கி, காவலில் எடுத்துள்ளனர்” என்று எழுதியுள்ளார்.

By admin