• Sun. Jul 19th, 2026

24×7 Live News

Apdin News

ஜோர்டானில் இரான் நடத்திய தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி – மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

Byadmin

Jul 19, 2026


டிரம்ப், இரான், அமெரிக்கா, ஜோர்டான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

    • எழுதியவர், கேத்ரீன் ஆம்ஸ்ட்ராங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
    • இருந்து, வாஷிங்டன் டிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

வெள்ளிக்கிழமை ஜோர்டானில் இரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களில் அமெரிக்கா ராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஒருவரைக் காணவில்லையென்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நான்கு ராணுவ வீரர்கள் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது திரும்பி விட்டதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. சிறிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியதாகவும் சென்ட்காம் குறிப்பிட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் பற்றியும் தாக்குதல் நடைபெற்ற இடம் மற்றும் சூழல் பற்றியும் மேலதிக தகவல்களை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வழங்கவில்லை.

சனிக்கிழமை இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி இரான் மீது மீண்டும் ஒரு முறை வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

டிரம்ப், இரான், அமெரிக்கா, ஜோர்டான்

பட மூலாதாரம், Amir Hossein KHORGOOEI / ISNA / AFP via Getty Images

தொடர்ந்து எட்டாவது நாளாக நடைபெறும் இந்தத் தாக்குதல்கள், “ஹோர்மூஸ் நீரிணையில் வணிக கப்பல் போக்குவரத்தை அச்சுறுத்தும் இரானின் திறனை மேலும் மட்டுப்படுத்துவதற்கானது.” என்று சென்ட்காம் அறிக்கை கூறுகிறது.

By admin