• Mon. Jul 20th, 2026

24×7 Live News

Apdin News

பிரிட்டிஷாருக்கு எதிராக மட்டுமா காந்தி உண்ணாவிரதம் இருந்தார்? வரலாற்று உண்மை என்ன?

Byadmin

Jul 19, 2026


காந்திஜி, சோனம் வாங்சுக்

பட மூலாதாரம், Image source,Hulton-Deutsch Collection/CORBIS/Corbis via Getty Images

    • எழுதியவர், உர்விஷ் கோத்தாரி
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

டெல்லியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக காந்தியின் உண்ணாவிரதமும் மீண்டும் ஒருமுறை விவாதப் பொருளாகியுள்ளது.

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதத்தை விமர்சிப்பவர்களில் சிலர், காந்தியின் காந்தியின் உண்ணாவிரதமும் ஒரு வகையான பிளாக்மெயில்தான் என்று கூறினர். வேறு சிலரோ வரலாற்று உண்மைகளைத் தள்ளி வைத்துவிட்டு, எதிரே இருந்தது பிரிட்டிஷ் அரசு என்பதால்தான் காந்தி உண்ணாவிரத ஆயுதம் வெற்றி பெற்றது என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.

வரலாற்று உண்மை முற்றிலும் வேறானது. 1915 ஆம் ஆண்டில் காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததில் இருந்து, ஜனவரி 30, 1948 இல் அவர் படுகொலை செய்யப்படும் வரையிலான அவரது வாழ்நாளில் சுமார் முப்பது முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

‘காந்தியின் நாட்குறிப்பு’ போன்ற வரலாற்று ஆதார நூலின் பதிப்பாசிரியரான சந்துலால் தலால், காந்தியின் ‘அனைத்து உண்ணாவிரதங்களும் பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருந்திருக்கலாம்’ என்ற குறிப்புடன் அவரது உண்ணாவிரத விவரங்களை ஆவணப்படுத்தியுள்ளார்.

அவற்றில் ஒரு நாள் முதல் இருபத்தியொரு நாட்கள் வரையிலான காலவரையறை கொண்ட உண்ணாவிரதங்கள் அடங்கும்.

By admin