• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

சோனம் வாங்சுக் 17 நாட்களாக உண்ணாவிரதம் – 8.2 கிலோ எடை குறைந்ததால் அதிகரிக்கும் கவலை

Byadmin

Jul 15, 2026


சோனம் வாங்சுக், உண்ணாவிரதப் போராட்டம், உடல்நலம், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி சீர்திருத்தம், காக்ரோச் ஜனதா கட்சி, அபிஜீத்  தீப்கே

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, 59 வயதான சோனம் வாங்சுக் இரண்டு வாரங்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்

“நான் வெளியிலிருந்து பலவீனமாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் வலிமையாக இருக்கிறேன்.”

டெல்லியில் கடந்த 17 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், பார்ப்பதற்கு மெலிந்த தோற்றமளிக்கும் சோனம் வாங்சுக், திங்கள்கிழமை பிபிசியிடம் இவ்வாறு கூறினார்.

திங்கள்கிழமை காலை வெளியிடப்பட்ட சமீபத்திய உடல்நிலை அறிக்கையின்படி, வாங்சுக் 8.2 கிலோ எடை இழந்துள்ளார். அவரது ரத்த அழுத்தம் 107/70 ஆகவும், ரத்தச் சர்க்கரை அளவு 67 ஆகவும் குறைந்துள்ளது.

அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது ஆதரவாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு ஆயிரக்கணக்கானோர் அவருக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இருப்பினும், 59 வயதான வாங்சுக் தனது முடிவில் உறுதியாக உள்ளார். “நான் தொடங்கிய இந்தப் போராட்டத்தை அதன் தர்க்கரீதியான இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும்,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

By admin