• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

சோழர் கால நீர் மேலாண்மை நுட்பத்தை காட்டும் தூம்புக் கல்வெட்டு கூறுவது என்ன?

Byadmin

Jul 10, 2025


திருவண்ணாமலையில் கிடைத்த தூம்புக் கல்வெட்டு காட்டும் சோழர் கால நீர் மேலாண்மை அதிசயம்
படக்குறிப்பு, இந்தத் தூம்புக் கல்வெட்டுகள் சோழர் கால நீர் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விளக்குவதாகக் கூறுகிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன்

    • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருவண்ணாமலையை அடுத்த மெய்யூரிலும் தண்டரையிலும் சோழர்கள் கால தூம்புக் கல்வெட்டுகளை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கல்வெட்டுகள் பல முக்கிய வரலாற்றுச் செய்திகளைக் கூறுகின்றன.

திருவண்ணாமலை வட்டம் மெய்யூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் வடக்குப் பகுதியில் கல்லால் ஆன தூம்பு இருக்கிறது. தூம்பு என்பது நீர்நிலைகளில் நீரை வெளியேற்ற அமைக்கப்பட்டிருக்கும் ஒரு வகையான திறந்து – மூடும் அமைப்பு.

இந்தத் தூம்பின் ஒரு பகுதியில் கல்வெட்டுகள் உள்ளதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்டறிந்தனர்.

இந்தக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளின் அடிப்படையில், அது 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டாக இருக்கக்கூடும் என்கிறார் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளரும், திருவண்ணாமலை வட்டாட்சியருமான பாலமுருகன்.

By admin