• Thu. Oct 22nd, 2026

24×7 Live News

Apdin News

சௌதி அரேபியாவில் உள்ள கடுமையான சட்டம் பற்றிய ஒரு பார்வை – வெளிநாட்டினர் அறிய வேண்டியது?

Byadmin

Oct 20, 2026


இஸ்லாமிய ஷரியா சட்டம், சௌதி அரேபியா, மத்திய கிழக்கு

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

சௌதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டினர் எவரும் அந்நாட்டின் சட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமென பல்வேறு நாட்டு தூதரகங்களும் அறிவுறுத்துகின்றன.

ஓர் உதாரணம், சௌதியின் இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின்படி, மற்றவர்களின் தனிப்பட்ட உரிமையை மீறும் வகையில் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் அதிகபட்சமாக 5,00,000 சௌதி ரியால் (சுமார் 1 கோடி ரூபாய்) வரைகூட அபராதம் மற்றும் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கச் சட்டத்தில் இடமுள்ளது. மக்களின் அனுமதியின்றி அவர்களைப் புகைப்படம் எடுப்பது அல்லது அத்தகைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது ஆகியவையும் இதில் அடங்கும்.

இன்னும் பல குற்றங்களுக்கு கசையடிகள், சிறைத் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படுகிறது.

“சௌதியில் நீங்கள் உள்ளூர் சட்டங்கள் பற்றி தெரியாமல் அதனை மீறினாலும், நாடு கடத்தப்படலாம், கைது செய்யப்படலாம் அல்லது சிறையில் அடைக்கப்படலாம்” என அமெரிக்க தூதரகம் எச்சரிக்கிறது.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஆண்டு அந்நாடு சுமார் 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. அவர்களில் பலர் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட வெளிநாட்டினர் ஆவர்.

By admin