• Mon. Oct 19th, 2026

24×7 Live News

Apdin News

ஜந்தர் மந்தர் 2.0: காக்ரோச் ஜனதா கட்சி தவறவிட்டது என்ன? நேஹா போராவின் பலமாக மாறியது எது? – ஓர் அலசல்

Byadmin

Oct 19, 2026


காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, தங்களுக்குத் தலைமை தாங்குவது யார் என்பது போராட்டக்காரர்களுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.

படக்குறிப்பு, காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, தங்களுக்குத் தலைமை தாங்குவது யார் என்பது போராட்டக்காரர்களுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கடந்த வாரம் டெல்லியில் பெரும் பதற்றம் நிலவியது. இந்தப் பதற்றம் நாட்டின் பல பகுதிகளிலும் எதிரொலித்தது. போராட்டங்கள் நடைபெற்ற சூழலில், தேசியத் தலைநகரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

சுமார் 30,000 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர், பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேருந்துகளில் ஏற்றும் காட்சிகள் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் வெளியாகின.

இந்தப் போராட்டங்களின் மையத்தில் சிஜேபி எனப்படும் காக்ரோச் ஜனதா கட்சி இருந்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையானது பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமாக இருப்பதாக இந்தக் கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த இயக்கத்தை மூன்று முக்கிய சக்திகள் வழிநடத்துவதாகத் தெரிகிறது. காக்ரோச் ஜனதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி மற்றும் இடதுசாரி அமைப்புகள். இந்தப் போராட்டங்கள் அரசுக்கு சவாலாக அமைந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த நிகழ்வுகளும் பல கேள்விகளை எழுப்புகின்றன.

By admin