கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக வேண்டிய ஜன நாயகன் திரைப்படம் சென்சார் முட்டுக்கட்டை காரணமாக இதுவரை ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இடையில் இந்தப் படம் இணையத்தில் லீக் ஆன விவகாரம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இணையத்தில் லீக் ஆன போதிலும் இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஜன நாயகன் திரைப்படம் சட்டவிரதமாக இணையக்கில் கசிந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்தப் படம் எடிட்டிங் குழுவில் இருந்தவரால் கசியவிடப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களது ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில் ஜன நாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரத்தில் தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.