• Thu. Jun 4th, 2026

24×7 Live News

Apdin News

விசம் உண்டு உயிர் உடல் விட்டுப் போகினும் | நதுநசி

Byadmin

Jun 4, 2026


வரலாற்றை மறந்தால்,
வரலாறு நம்மை
மறந்து விட்டுப் போகும்.
நம்மை நாமே தேட;

எப்படி பிறந்தோம்
என்பதை அறிந்தால்;
எதற்காய் பிறந்தோம்
என்பது தெரியும்.

உரிமை விட்டு வாழ்ந்தால்
வசதி கிடைக்கலாம்.
பேச்சை விட்டு வாழ்ந்தால்
மௌனமும் வெறுக்கலாம்.

எரிமலையில் நடந்தவர்
வாழ்ந்த பூமியில்;
பனிமலை ஏற வேண்டாம்
நீரோடு பழகிட வேண்டும்.

விசம் உண்டு உயிர்
உடல் விட்டுப் போகினும்;
உள்ளுறையும் உண்மை
பகை கிட்டாது வாழ்ந்தவர்.

பகையோடு தோளில்
கைபோட்டு நடந்து; – அன்று
நடப்பவை எல்லாம் நன்றே
உரைத்து வாழ்தாருண்டே!

எது நடந்ததோ? – அதை
நடந்தபடி ஆய்தொழுகி;
காரணகாரிய முடிவால்;
நடந்திருக்கலாம் களத்தில்.

ஈழத்தில் நடந்தேறிய
வீரப்போரின் தடயங்கள்;
தேடி அறிந்து படித்தால்,
மனம் திகைத்துப் போகும்.

வீரமும் செல்வமும் சேர்ந்து,
கல்வியோடு வாழ்ந்த;
இனமெதற்கு மண்டியிட்டு;
அடிமை வாழ்வு வாழ்கிறதோ?

பகலில் நடக்கப் பயந்த
மாந்தரும் நடந்தார்;
பகை வீட்டிலன்று இருளில்.
அவன் தூக்கம் தொலைக்க.

வானேறிய வீண்ணர்
ஆழ்கடல் ஓடிய சூரர்.
மின்னலை வழி பயணம்
நீர்மூழ்கி எழுந்தனர்.

அப்பப்பா எவ்வளவோ?….
தேடத்தேட வந்த வண்ணம்;
எங்கள் வரலாறு மிஞ்ச
இந்த வையகத்தில் ஏதுண்டோ?

நதுநசி

The post விசம் உண்டு உயிர் உடல் விட்டுப் போகினும் | நதுநசி appeared first on Vanakkam London.

By admin