• Wed. Sep 9th, 2026

24×7 Live News

Apdin News

ஜஹாங்கீர்: தீவிர மதுப்பழக்கத்தை ஒப்புக்கொண்ட முகலாயப் பேரரசர் – நூர்ஜஹான் வசம் சென்ற அதிகாரம்

Byadmin

Sep 9, 2026


ஜஹாங்கீர்

பட மூலாதாரம், Heritage Art/Heritage Images via Getty Images

    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர், ஆய்வாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

“நான் சுல்தானை நூர்ஜஹானிடம் ஒப்படைத்துவிட்டேன். எனக்கு இப்போது அரை கிலோ இறைச்சியும், ஒரு குவளை மதுவும் மட்டுமே தேவை.”

இது நான்காவது முகலாயப் பேரரசர் நூருதீன் முகமது ஜஹாங்கீர் கூறியது என மிர்சா முகமது ஹாதி தனது துஸுக்-இ-ஜஹாங்கிரி நூலின் முன்னுரையில் எழுதியுள்ளார்.

ஆனால், அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தான் எழுதிய ஜஹாங்கீர்நாமா நூலில், மதுபானம் மற்றும் பிற போதைப் பொருட்களை உட்கொண்ட சம்பவங்களை ஜஹாங்கீர் மறைக்கவில்லை.

ஆட்சி, நீதி, கலை மற்றும் இயற்கை குறித்த தனது அனுபவங்களுடன், இவற்றைப் பற்றியும் அவர் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

பெனி பிரசாத் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் ஜஹாங்கீர் நூலில், 1569-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஜஹாங்கீர் பிறந்தது குறித்து, “பிரார்த்தனைகள், நேர்த்திக்கடன்கள் மற்றும் புனிதப் பயணங்களுக்குப் பிறகு பிறந்த அந்தக் குழந்தை, அந்தக் காலத்தின் செல்வமும் சிறப்பும் மிக்க பேரரசரின் மூத்த மகனாக இருந்தான். அழகிய அரச நகரமான ஃபதேபூர் சிக்ரியின் மிகவும் பிரியமான இளவரசனாகவும் இருந்தான்” என்று எழுதப்பட்டுள்ளது.

By admin