11-பேர் குழு:
ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் ‘JPSC-JSSC சீர்திருத்த மன்றம்’ (JPSC-JSSC Reforms Manch) என்ற அமைப்பின் கீழ் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், சமீப காலங்களில் மாநிலத்தில் மாணவர்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
“போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அரசு விடுத்த அழைப்பை ஏற்று, எட்டு மாணவர்கள், இரண்டு நிபுணர்கள் மற்றும் ஒரு வழக்கறிஞர் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவை நாங்கள் அமைத்துள்ளோம்,” என்று JPSC-JSSC சீர்திருத்த மன்றத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என்று முதல்வர் ஹேமந்த் சோரன் கூறிய மறுநாளே, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டது.