• Wed. Aug 12th, 2026

24×7 Live News

Apdin News

ஜிம்பாப்வேயின் கரிபா ஏரியில் படகு கவிழ்ந்ததில் 15 பேர் பலி; 27 பேர் மாயம்

Byadmin

Aug 12, 2026


மீட்பு பணிகள் தீவிரம்:

உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரான முட்சா முரோம்பெட்ஸி (Mutsa Murombedzi) ஒரு காணொளியை வெளியிட்டார்; அதில், பழமையானதாகத் தோன்றும் அந்தப் படகு தனது பயணத்தைத் தொடங்கியபோது, ​​கரையில் இருந்தவர்கள் அதற்கு விடை கொடுக்கும் வகையில் கைகளை அசைப்பது பதிவாகியுள்ளது. கிராமப்புற மக்கள் கரிபா நகரத்திற்குச் செல்ல ஏரி வழியாக இந்தப் படகை பயன்படுத்துவதாக அவர் கூறினார்.

ஏரியில் வீசும் பலமான அலைகளை அந்தப் படகு தாங்குமா என்பது குறித்து கரையில் நின்றிருந்த சிலர் கவலை தெரிவித்ததையும் அந்தக் காணொளி காட்டுகிறது.

முன்னதாக, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக ஜிம்பாப்வே காவல்துறை கூறியது, ஆனால் வேறு எந்த விவரங்களையும் அளிக்கவில்லை. ஏரியில் தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தோன்றும் படகை நோக்கி அதிவேகப் படகுகள் செல்வதையும், ஹெலிகாப்டர் ஒன்று மேலே வட்டமிடுவதையும் காட்டும் காணொளியை ஜிம்பாப்வேயின் அரசு ஒலிபரப்பு நிறுவனமான ZBC வெளியிட்டது.

By admin