• Wed. Jul 29th, 2026

24×7 Live News

Apdin News

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

Byadmin

Jul 28, 2026


மூன்றாவது முறையாக இந்த ஆண்டிற்கான சிறந்த பின்னணி இசையமைப்பாளர் எனும் இந்திய தேசிய விருதை வென்று தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்த இசை கலைஞரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இம்மோற்றல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஷீ இஸ் மை செல்ல குட்டி ..’ எனும் பாடலும், பாடலுக்காக படமாக்கப்பட்ட பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவாகி வரும் ‘இம்மோற்றல்’ திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கயாடு லோகர், ‘லொள்ளு சபா’ மாறன், ‘ஆதித்யா’ கதிர், குமார் நடராஜன், டி எம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ் . இசையமைத்திருக்கிறார். ஃபீல் குட் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ கே ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொல்லாத ஆசைய சொல்லாம கொள்ளாம…’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் தமிழ் ஆதவன் மற்றும் சாம் சி எஸ் ஆகியோர் இணைந்து எழுத, பின்னணி பாடகர் ஆர் கே ஆதித்யா பாடியிருக்கிறார். மேலத்தேய தாள நயத்துடன் மெல்லிசையாக உருவாகி இருக்கும் இந்தப் பாடல் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

The post ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு appeared first on Vanakkam London.

By admin