• Tue. Jul 28th, 2026

24×7 Live News

Apdin News

‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான 60 கோடி ரூபாய் சொத்துக்கள் அபகரிப்பு’: 19 பேர் மீது வழக்குப்பதிவு

Byadmin

Jul 28, 2026


மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பத்திரப்பதிவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் மற்றும் அழகர்கோவிலுக்குச் சொந்தமான சுமார் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, பத்திரப்பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையரும், செயல் அலுவலருமான செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

“சொத்துக்களின் அரசு வழிகாட்டி மதிப்பு 20 கோடி முதல் 30 ரூபாய் கோடி வரையிலும், தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 60 கோடியாகவும் உள்ளது. சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட இந்தச் சொத்துக்கள் சட்ட வழிகளின் மூலம் மீட்கப்படும்” என்று அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பத்திரப்பதிவு

பட மூலாதாரம், Tamil Nadu Assembly

படக்குறிப்பு, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

புகாரில் கூறப்பட்டுள்ளது என்ன?

செல்லத்துரை அளித்துள்ள புகாரின்படி, 1930-ஆம் ஆண்டு சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் ‘புதுக்கோட்டை ராஜகுமாரர் தட்சிணாமூர்த்தி துரைராஜா துரைராணி அறக்கட்டளை’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட உயில் சாசனத்தின்படி இந்தச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டன.

மதுரையில் உள்ள அழகர்கோவில் சாலை மற்றும் 10-வது வார்டுக்கு உட்பட்ட ஹக்கீம் அஜ்மல்கான் சாலையில் அமைந்துள்ள ‘அசோகா விலாஸ்’ பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் ஆகிய 1.79 ஏக்கர் சொத்துக்கள் இதில் அடங்கும்.

By admin