• Tue. Jul 22nd, 2025

24×7 Live News

Apdin News

ஜெகதீப் தன்கர் இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்? ஊகங்களும் சர்ச்சைகளும்

Byadmin

Jul 22, 2025


ஜெகதீப் தன்கர்

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, ஜெகதீப் தன்கர் திடீரென துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்திய குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ள ஜெகதீப் தன்கர் அரசியல் விவாதத்தின் மையமாக மீண்டும் மாறியுள்ளார்.

அவரது ராஜினாமா குறித்து பல ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், அவரது அரசியல் பயணத்தின் பழைய சர்ச்சைகளும் மீண்டும் பேசுபொருளாகி உள்ளன.

ஜனதா தளத்தில் இருந்து காங்கிரசிலும், பின்னர் பாஜகவிலும் இணைந்த தன்கரின் அரசியல் பயணத்தில், அவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஆனால், அவரது கருத்துகளும், முடிவுகளும் அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது ராஜினாமா செய்ததற்கான காரணமாக தனது உடல்நலனை சுட்டிக்காட்டியுள்ளார் தன்கர். அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 2027 இல் முடிவடைய இருந்தது.

By admin