‘அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்’ – தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி
கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி.
“பல்வேறு இன்னல்கள், தடைகளை தாண்டி இன்று பிஹெச்.டி முடித்து, லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன்” என்கிறார் என். ஜென்சி.
சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய ஜென்சி, பி.ஏ., எம்.ஏ.வில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.
“சமூகம் என்னை அடக்குமுறை செய்தபோது என்னை காப்பாற்றியது கல்விதான்.” என கூறுகிறார் ஜென்சி. ஏழ்மையான நிலையிலும் கல்வியை கைவிடாததற்கு இதுவே காரணம் என்கிறார் அவர்.
ஜென்சி லயோலா கல்லூரியில் பணியாற்றுவது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவிக்கிறார், லயோலா கல்லூரியின் ஆங்கில துறை தலைவரும் ஜென்சியின் முனைவர் பட்ட வழிகாட்டியுமான மேரி வித்யா பொற்செல்வி.
“என்னை முதலில் பேராசிரியராக பாருங்கள், பின்னர் எந்தவித கற்பிதங்களும் இல்லாமல் திருநங்கையாக பாருங்கள்.” என்கிறார் பேராசிரியர் ஜென்சி.
தயாரிப்பு: நந்தினி வெள்ளைச்சாமி
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: டேனியல்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு