• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

ஜென் Z தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.. எனக்கு பதவி பொருட்டல்ல – தர்மேந்திர பிரதான் மனம் திறப்பு

Byadmin

Aug 9, 2026


தர்மேந்திர பிரதான்

அவர் பேசியதாவது,

“ஜென் Z நமது குழந்தைகள். ஆனால் நீட் விவகாரத்தின் போது சில சக்திகள் அவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றன. எனக்கு அப்போது தனிப்பட்ட சுயநலன்கள் எதுவும் இருக்கவில்லை.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2 கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 2 கோடி குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்குப் பல கனவுகளும் லட்சியங்களும் உள்ளன. அவர்கள்தான் இந்தியாவை உலகின் வழிகாட்டியாக மாற்றுவார்கள். எனக்கு இந்த அமைச்சர் பதவி முக்கியமில்லை” என்று தெரிவித்தார்.

விமான நிலையம் அருகே பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பினர் “தர்மேந்திர பிரதான் திரும்பிப் போ” என முழக்கமிட்டு நடத்திய போராட்டத்தைக் குறிப்பிட்ட அவர், “நான் ஒரு விவசாயியின் மகன். நீங்கள் திரும்பிப் போகச் சொன்னாலும், நான் மீண்டும் மீண்டும் வருவேன்” என்றார்.

பிஜேடி இளைஞர் மற்றும் மாணவர் அணியினர் சுமார் 30 பேரை சம்பல்பூர் காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

By admin