• Sun. Aug 9th, 2026

24×7 Live News

Apdin News

பழனி நில விவகாரம்: கைதானவர் சிறையில் உயிரிழப்பு, அதிகாரி மருத்துவமனையில் அனுமதி – என்ன நடக்கிறது?

Byadmin

Aug 9, 2026


பழனி

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பழனியில் மடத்துக்குச் சொந்தமான நிலத்தை தனி நபர்களுக்கு பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமாக 1.35 ஏக்கர் நிலம் உள்ளது.

கடந்த 1888-ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமி என்பவருக்குக் குப்புசாமி மணியக்காரர் என்பவர் தானமாக இந்த நிலத்தை வழங்கியுள்ளார்.

‘நிலத்தில் மடம் கட்டவும் இந்துமதக் கோட்பாடுகளை பரப்பவும் இவை எழுதிக் கொடுக்கப்பட்டது’ என, பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியுள்ளார்.

மலையின் அடிவாரத்தில் பூங்கா சாலையில் அமைந்துள்ள இந்த நிலத்தில் பக்தர்கள் தங்குவதற்கும் வாகன நிறுத்தமாக பயன்படுத்திக் கொள்வதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

By admin