• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

ஜெர்மனியில் ஹாலோவீன் இனிப்புகளில் ஆணிகள் மற்றும் ஊசிகள் மீட்பு: பொலிஸார் அவசர எச்சரிக்கை

Byadmin

Nov 3, 2026


ஜெர்மனியில் அண்மையில் இடம்பெற்ற ஹாலோவீன் பண்டிகையின் போது சிறுவர்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்த இனிப்புகளில் ஆணிகள், திருகுகள் மற்றும் ஊசிகள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்களை அடுத்து பிள்ளைகள் சேகரித்த இனிப்புகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு பொலிஸாரால் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மியூனிக் நகரில் நண்பர்களுடன் இணைந்து இனிப்புகளைச் சேகரித்த 09 வயதுச் சிறுவன் ஒருவன், தான் உட்கொண்ட மிட்டாய் ஒன்றில் ஆணி இருப்பதை அவதானித்து பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்தே இந்த அதிர்ச்சித் தகவல் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதேபோன்று பிரெமர்வோர்டே நகரில் 09 வயதுச் சிறுமி உட்கொண்ட சொக்லேட்டில் ஐந்து சென்ரிமீற்றர் நீளமுள்ள ஊசி ஒன்றும், ஃபெஹ்மார்ன் தீவுப் பகுதியில் 11 வயதுச் சிறுமி உட்கொண்ட சொக்லேட் ஒன்றில் தையல் ஊசியும் கண்டறியப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, மத்திய நகரமான உம்ப்பெர்ஸ்டெட் பகுதியில் 11 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் சேகரித்த மெல்லும் பசைப் பக்கற்றுகளில் கூரிய உலோக ஸ்டேப்பிள் முட்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான சம்பவங்கள் தொடர்பில் ஜெர்மன் பொலிஸார் தீவிர குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்துள்ள போதிலும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

By admin