• Tue. Nov 3rd, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி சாத்தியமா? ஆதவ் அர்ஜூனா பேச்சால் புது விவாதம்

Byadmin

Nov 3, 2026


தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி சாத்தியமா? ஆதவ் அர்ஜூனா பேச்சால் எழும் விவாதம்

தமிழ்நாட்டுக்கென தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தெரிவித்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள்’ நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை பாஜக விமர்சித்துள்ளது.

நவம்பர் 1-ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கடைப்பிடிக்கப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளை இது குறிக்கிறது.

இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘எத்தனையோ மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கென கொடி இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

தமிழை முதன்மைப்படுத்தி ஒரு கொடியை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், “அதை நவம்பர் 1 மற்றும் ஜூலை 18 ஆகிய தேதிகளில் நம்முடைய முதல்வர் கையால் முதல்முறையாக ஏற்ற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஏற்ற வேண்டும். தேசியக் கொடிக்குச் சமமாக தமிழுடைய பெருமையை போற்றக்கூடிய ஒரு கொடியை தமிழ்நாட்டுக்காக உருவாக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம்.” என்றார்.



By admin