• Wed. Aug 19th, 2026

24×7 Live News

Apdin News

ஜோதி அஹோர்: மகாராஷ்டிராவில் பெண் வயர்மேனின் ஒருநாள் வேலை எப்படி உள்ளது?

Byadmin

Aug 19, 2026


ஜோதி அஹோர், மகாராஷ்டிரா

பட மூலாதாரம், PrajwalBhalerao/BBC

    • எழுதியவர், பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தாமங்காவ் என்பது மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம். இக்கிராமத்தில் ஒரு கோயில், ஒரு சதுக்கம், ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு மகாவிதரன் அலுவலகம் ( மகாராஷ்டிராவின் மின்சார விநியோக அலுவலகம்) உள்ளது.

மகாராஷ்டிராவின் எந்தவொரு கிராமத்திலும் பார்க்கக்கூடிய காட்சிதான் இது.

ஆனால், இந்த கிராமத்தில் பைக்கில் சென்று மகாவிதரனில் பணியாற்றும் ஒரு பெண்ணைப் பற்றி பலரும் பெருமையாகப் பேசுகிறார்கள். அவரது பெயர் ஜோதி அஹேர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மகாவிதரனில் பணியாற்றி வரும் ஜோதி, புல்தானா மாவட்டம் தாமங்காவ் கிராமத்தில் மின்சார விநியோகம் தொடர்பான புகார்களை தீர்த்து வருகிறார்.

சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மற்றும் தனது துறையில் ‘பெண் வயர்மேன்’ என்று அறியப்பட்டாலும், கிராம மக்களுக்கு அவர் ஒரு மகளாகவே இருக்கிறார்.

By admin