0
டியாகோ ஜோட்டாவின் அகால மரணம் தம்மை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருப்பதாக லிவர்பூல் அணி தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் ஸமோரா நகரின் அருகே நடந்த கோர கார் விபத்தில் டியாகோவும் அவரது சகோதர் அண்டிரேவும் உயிரிழந்தனர்.
டியாகோ மரணம் குறித்து தற்போது வேறெந்தக் கருத்தையும் வெளியிடப்போவதில்லை என லிவர்பூல் அணி, அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
டியாகோவைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக கால்பந்து அணியின் ஊழியர்கள் ஆகியோருக்கு முழு ஆதரவளிக்கப்படும் என்றும் லிவர்பூல் அணி தெரிவித்துள்ளது.
அதேவேளை, டியாகோ சிறந்த விளையாட்டாளர் மட்டுமல்ல, அவர் சிறந்த மனிதரும் கூட என்று போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனத் தலைவர் பெட்ரோ பொரோவேங்க்கா புகழாரம் சூட்டினார்.
தொடர்புடைய செய்தி : ஸ்பெயின் கார் விபத்தில் லிவர்பூல் நட்சத்திரம் டியோகோ ஜோட்டா மரணம்!
அன்ஃபீல்ட் அரங்கத்தில் திரளும் ரசிகர்கள்
மறைந்த லிவர்ப்பூல் கால்பந்து அணி வீரர் டியோகோ ஜோட்டாவுக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அன்ஃபீல்ட் அரங்கத்தில் திரண்டுள்ளனர்.
டியோகோவின் மரணச் செய்தி வெளியானது முதல் அரங்கத்துக்கு வெளியே ரசிகர்கள் பூக்கள், கால்பந்து ஜெர்சிகள், பலூன்கள் மற்றும் கொடிகள் ஆகியவற்றை வைத்து வருகின்றனர். சிலர் அனுதாப வார்த்தைகளை எழுதி வைத்துள்ளதாக BBC கூறுகிறது.
அவரது மரணம் பேரிழப்பு என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.