• Sun. Sep 27th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்பை கையாள ஜின்பிங் ஒரு வழி கண்டுவிட்டாரா? அமெரிக்காவிடம் சீனா விரும்பியது கிடைத்ததா?

Byadmin

Sep 27, 2026


 டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையில் இரவு விருந்தின் போது டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்

    • எழுதியவர், லாரா பிக்கர்
    • பதவி, சீனா செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு தெளிவான நோக்கம் உள்ளது.

சீனா ஒரு வல்லரசாக உருவெடுப்பதை அமெரிக்கா தடுக்க முயற்சிப்பதாக சீனா கருதுகிறது. குறிப்பாக வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் தைவான் விவகாரங்களில் அமெரிக்கா தனது பாதையிலிருந்து விலக வேண்டும் என்று சீனா விரும்புகிறது.

இந்தப் பயணத்தின் போது டிரம்ப், ஷி ஜின்பிங்குக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பை அளித்தபோதிலும், சீன அதிபர் தான் விரும்பிய அனைத்தையும் பெறவில்லை.

வர்த்தகப் போரில் அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தம் இன்னும் சில மாதங்களுக்கு மட்டுமே, அதாவது நவம்பர் முதல் ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகப் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டபோது, இரு நாடுகளும் தங்களது வரி விதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தின. இதன் மூலம் பதற்றம் மேலும் அதிகரிப்பது தடுக்கப்பட்டது.

By admin