• Fri. Sep 25th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்ப் – ஜின்பிங் சந்திப்பு: பிரமாண்டம் இருந்தாலும் பெரிதாக முன்னேற்றம் இல்லாதது ஏன்?

Byadmin

Sep 25, 2026


சீன அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

    • எழுதியவர், அந்தோனி ஜூர்ச்சர்
    • பதவி, வட அமெரிக்க செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் அமெரிக்கப் பயணம் பற்றி இதுவரை நடந்தவற்றை பார்க்கும்போது, அது பிரமாண்ட வரவேற்புகளால் கவனம் ஈர்த்திருந்தாலும், முக்கியமான விவகாரங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

புதன்கிழமை ராணுவ விமானத் தளத்தில் அளிக்கப்பட்ட பாரம்பரிய வரவேற்பிலிருந்து, வியாழக்கிழமை காலை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசுமுறை வரவேற்பு வரை, அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன அதிபருக்கு அனைத்துவித மரியாதைகளையும் வழங்கினார்.

இரு தலைவர்களும் பொதுவெளியில் பேசியபோது, அன்பான வார்த்தைகளும் தூதரக ரீதியான மரியாதைச் சொற்களும் நிறைந்திருந்தன. அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், சீன பாண்டாக்களை அன்பளிப்பாக வழங்குவதாகவும், புதிய மாணவர் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் ஷி அறிவித்தார்.

“நமது இரு நாட்டு மக்களுக்கிடையேயான நட்பை மேலும் வலுப்படுத்தி, சிறந்த உலகை உருவாக்க இணைந்து செயல்படுவோம்,” என்று அவர் கூறினார்.

தனது பங்கிற்கு டிரம்ப், பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் அவர் செயற்கை நுண்ணறிவைக் குறிக்க அடிக்கடி பயன்படுத்தும் “சூப்பர் இன்டெலிஜென்ஸ்” உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தவிருப்பதாகத் தெரிவித்தார்.

By admin