• Fri. Sep 25th, 2026

24×7 Live News

Apdin News

உலகில் முதன்முறை; ஆஸ்திரேலிய அரசு இணையதளத்தை ‘ஊடுருவிய’ ஓபன்ஏஐ ஏஜென்ட்

Byadmin

Sep 25, 2026


ஓபன்ஏஐ

    • எழுதியவர், ஹாரி செகுலிச் மற்றும் லானா லாம்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஒரு ஓபன்ஏஐ ஏஜென்ட் ஜூன் மாதத்தில் ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்தை ஹேக் செய்து, தனிப்பட்ட தரவுகளை அணுகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவம் உலகில் பதிவான முதல் சம்பவமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமான மெடிகேர் தொடர்பான “முக்கியத்துவம் குறைந்த” தரவுகள் இடம்பெற்றிருந்த புள்ளிவிவர இணையதளத்தில் அந்த ஏஜென்ட் “ஊடுருவியதாக” ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் புதன்கிழமை உள்ளூர் நேரப்படி நியூயார்க்கில் தெரிவித்தார்.

இந்தத் தரவு கசிவு குறித்து தகவல் தெரிவிக்க “அதிக காலம் எடுத்துக்கொண்டதற்காக” ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனுடன் தான் “மிகவும் வெளிப்படையான பேச்சுவார்த்தை” நடத்தியதாகவும், இதற்கு “சட்டரீதியான விளைவுகள்” இருக்கும் என்றும் அவர் கூறினார்.

“கட்டுப்பாடுகளை மீறிய மாதிரி செயல்பாடு” குறித்து ஆய்வு செய்தபோது, ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்தத் தரவு கசிவு குறித்து தெரிந்துகொண்டதாக ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10-ம் தேதி ஆஸ்திரேலிய அரசு நிறுவனத்தின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு அது மின்னஞ்சல் அனுப்பியது.

By admin