அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த பாகிஸ்தான் பிரதமரிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்பொழுது நிறுத்துவீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 81வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் 193 உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்ககர் கலந்துகொண்டார்.
பாகிஸ்தான் சாப்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்புக்கு வருகை தந்திருந்தார். இதனிடையே பாகிஸ்தானுக்கு, இந்தியா தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தர தூதரக ஆலோசகரான ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்துங்கள்
இதுகுறித்து அவர் கூறுகையில், “பிறருடைய நிலங்களை அபகரிப்பதையோ அல்லது பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதையோ விட்டுவிட்டு, வளர்ச்சியில் கவனம் செலுத்துவதன் மூலம் பாகிஸ்தான் தனது மக்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்ய முடியும்.
ஏனெனில் மாநாட்டில் பாகிஸ்தான் காட்டும் நாடகங்கள், அதன் பொருளாதார கடன்களை திருப்பி செலுத்த உதவாது,” என்று அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
மேலும் அவர், “பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் ஜூன் மாதம் முதல் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டு, இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு, உணவு மற்றும் மருந்துகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன” என்றும் கூறினார்.
பத்திரிக்கையாளர்கள் கேள்வி
இந்த நிலையில் ஐ.நா. மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்பொழுது நிறுத்துவீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பாகிஸ்தான் பிரதமர் பதில் எதுவும் அளிக்காமல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக உள்ளே சென்றார்.
இதையடுத்து கூட்டம் முடிந்து வெளியே வந்த அவரிடம், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சையத் மீது எப்பொழுது வழக்கு தொடர்வீர்கள்? என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கும் எந்தவிதமான பதிலும் அளிக்காமல், பாகிஸ்தான் பிரதமர் சிரித்தபடி அங்கிருந்த தனது வாகனத்தில் ஏறி சென்றார்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா பகுதியை சேர்ந்த ஹபீஸ் முஹம்மது சயீத், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) நிறுவனராக அறியப்படுகிறார்.
மும்பையில் கடந்த 2008 நவம்பர் 26 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் வழக்கிலும், 2025 ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் வழக்கிலும், ஹபீச் சையதின் பெயர் இந்தியா தனது குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது.