• Fri. Sep 25th, 2026

24×7 Live News

Apdin News

மைத்ரேயி ராமகிருஷ்ணன்: ‘தமிழ் ஈழப்பெண்’ என கூறியதற்கு எதிர்ப்பை சந்திக்கும் நடிகை – என்ன சர்ச்சை?

Byadmin

Sep 25, 2026


மைத்ரேயி ராமகிருஷ்ணன், தமிழ் பின்னணியைக் கொண்ட கனட நடிகை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மைத்ரேயி ராமகிருஷ்ணன், தமிழ் பின்னணியைக் கொண்ட கனட நடிகை.

    • எழுதியவர், பாமினி முருகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“நான் தமிழ் பெண். என் குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது. என் கலாசாரம் தமிழ். என் நாடு கனடா. என் வேர்கள் இலங்கையில் இருக்கின்றன.”

கனடா நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் கூறிய இந்த வார்த்தைகள் சமூக வலைதளங்கள் விவாதப்பொருளாகியுள்ளன.

தன்னை ஒரு “தமிழ் ஈழப் பெண்” என அடையாளப்படுத்திக் கொண்டதற்காக இவர் தற்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

யார் இந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன்?

2020-ஆம் ஆண்டு வெளியான நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியான நெவர் ஹேவ் ஐ எவர் தொடர் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2020-ஆம் ஆண்டு வெளியான நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியான ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ தொடர் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

மைத்ரேயி ராமகிருஷ்ணன், தமிழ் பின்னணியைக் கொண்ட கனட நடிகை ஆவார்.

2001ஆம் ஆண்டு கனடாவில் பிறந்த மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு வயது 24. இவர் 2020-ஆம் ஆண்டு வெளியான நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியான ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ (Never Have I Ever) தொடர் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்தத் தொடரில் தேவி விஸ்வகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

By admin