• Fri. Sep 25th, 2026

24×7 Live News

Apdin News

நேபாள பெருவெள்ளம்: ‘சீன எல்லையில் இருக்கலாம்” – ஒரு மாதமாக காத்திருக்கும் குடும்பங்கள்

Byadmin

Sep 25, 2026


நேபாள பெருவெள்ளம்

பட மூலாதாரம், ராமசாமி

படக்குறிப்பு, நேபாள பெரு வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் ஒருவரான மாரியாள் ராமசாமி

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போன தனது தந்தை, தாய், மாமனார் மற்றும் அவரது ஆறு நெருக்கமான நண்பர்களும் உறவினர்களும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஒரு மாத காலமாக காத்திருக்கிறார் கவின்ராஜ்.

பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கவின் ராஜின் தந்தை நடராஜன் (66), தாய் கிருஷ்ணவேனி (55), மாமனார் அசோகன் ராமசாமி (68), மற்றும் பழனிவேல், மாரியாள் ராமசாமி உட்பட அசோகன் ராமசாமிக்கு நெருக்கமான ஆறு பேர் கடந்த மாதம் கைலாஷ் யாத்திரைக்கு சென்றிருந்தனர். சென்னை குரோம்பேட்டையில் இருந்து மகாதேவ் கைலாஷ் யாத்ரா எனும் ஏஜென்சி மூலம் புறப்பட்ட அவர்கள் ஆகஸ்ட் 25ம் தேதி சீன எல்லைக்குள் இருக்கும் கைலாஷில் தரிசனம் செய்திருந்தனர், மறு நாள் காலை அங்கிருந்துப் புறப்பட்டு சீன-நேபாள எல்லையை கடந்து வந்து காத்மாண்டுவிலிருந்து விமானம் மூலம் இந்தியா வருவதே அவர்களின் திட்டம்.

ஆகஸ்ட் 26ம் தேதி வெள்ளம் ஏற்படுவதற்கு சுமார் இரண்டரை மணி நேரம் முன்பாக காலை 6.15 மணிக்கு கவின் ராஜின் தந்தை அவரை அழைத்துப் பேசியுள்ளார். “அவர்களின் பயணத் திட்டப்படி முந்தைய நாள் சாமி தரிசனம் செய்திருந்தனர். 26ம் தேதி அவர் என்னை அழைத்த போது அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து கெய்ரோங்-ல் உள்ள குடிவரவு அலுவலகத்துக்கு புறப்படுவதாக கூறினார்”. அதுவே கவின் ராஜ் தனது தந்தையிடம் பேசிய கடைசி உரையாடலாகும்.

“அவர்கள் கைலாஷ் செல்லும் வழியில் எடுத்த புகைப்படங்களில் பின்னால் பில்கிரிம் இன் என்ற பெயர் கொண்ட கட்டடம் காணப்பட்டது. அதுவே அவர்கள் தங்கியிருந்த விடுதியாக இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 12 கி.மீ தூரத்தில் குடிவவு அலுவலகம் இருந்ததாக பயணத்தை ஏற்பாடு செய்த முகவர் கூறினார்” என்கிறார் கவின் ராஜ்.

நேபாள பெருவெள்ளம்

பட மூலாதாரம், Satellite image (c) 2026 Vanto

படக்குறிப்பு, வெள்ளப் பேரிடரில் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் அடித்துச் செல்லப் படுவதற்கு முந்தைய நேபாளம் – சீனா எல்லைப் பகுதியின் தோற்றத்தைக் காட்டும் ஒரு செயற்கைக்கோள் படம்

“3 நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை”

வெள்ளத்துக்கு பிறகு, தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கியிருந்த இடம், அவர்கள் கடைசியாக செல்போனில் அழைத்த இடம், அவர்கள் குடிவரவு அலுவலகத்துக்கு அருகிலேயே சிக்கிக் கொண்டனரா என்பவை குறித்து அறிய கவின்ராஜ், தமிழ் முருகன் உட்பட நான்கு பேர் காத்மாண்டுவுக்கு சென்றுள்ளனர். “ஒன்பது பேரை பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை” என்கிறார் கவின் ராஜ்.

By admin