• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

டிரம்ப் தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட கமலா ஹாரிஸ்

Byadmin

Sep 16, 2024


நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக உள்ளதுடன், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு பாம் பீச் பகுதியில் உள்ள சர்வதேச கோல்ப் கிளப்புக்கு சென்ற டிரம்ப் கோல்ப் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.

அப்போது, திடீரென அந்தப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனை டிரம்ப் பிரசார அமைப்பின் செய்தி தொடர்பாளரான ஸ்டீவன் சீயங் தெரிவித்துள்ளதுடன், வேறு எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், புளோரிடா பகுதிக்கு அருகே டிரம்ப் மற்றும் அவருடைய சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துப்பாக்கி சூடு நடந்தது என அறிந்தேன். அவர் பாதுகாப்பாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் பற்றி ஜனாதிபதி பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு விரிவாக விளக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

By admin